Thursday, December 10, 2009

கல்வி - அடிப்ப்டை மனித உரிமை




கல்வி - அடிப்ப்டை மனித உரிமை
இந்தியாவின் ஒவ்வொரு குடிமகனுக்கும் கல்வி கற்க உரிமை உண்டு. நமது அடிப்படைக் கொள்கைகளில் சில வருமாறு
*குறைந்தபட்சம் ஆரம்பம் மற்றும் அடிப்படை கட்டங்களில் ஆரம்பக் கல்வி இலவசமாக அளிக்கப்படும்*ஆரம்பக் கல்வி கட்டாயமாக்கப்படும்*தொழிற்கல்வி பொதுவாக அனைவரும் கற்கும் வகையில் இருக்கும்படி செய்யப்படும்*உயர்கல்வி, தகுதியின் அடிப்படையில் அனைவருக்கும் சமமான முறையில் பெறும்படி வழிவகை செய்யப்படும். மனிதனின் ஆளுமை முழுவளர்ச்சி பெறும் வகையிலும், மனித உரிமைகள் மற்றும் அடிப்படை சுதந்திரங்கள் ஆகியவற்றை மதிக்கும் எண்ணத்தை வலுவூட்டும் வகையிலும் கல்வி இருக்க வழிசெய்யப்படும்*தங்களது குழந்தைகளுக்கு எந்த வகையான கல்வியை அளிக்க வேண்டும் என்பது பற்றிய உரிமை பெற்றோர்களுக்கு இருக்கிறது.
அனைவருக்கும் கல்வி
அனைவருக்கும் கல்வி என்ற இயக்கம், உலகளாவிய கடமை உணர்வுடன், அனைத்து குழந்தைகள், இளைஞர்கள், பெரியவர்கள் ஆகியோர்களுக்கு தரமுள்ள அடிப்படைக் கல்வி வழங்கப்பட வேண்டும் என்ற நோக்கத்திற்காக செயல்படுகிறது. 1990ம் ஆண்டில் நடந்த ‘அனைவருக்கும் கல்வி’ என்பது குறித்த உலக மாநாட்டின்போது இந்த இயக்கம் ஆரம்பிக்கப்பட்டது.
பத்து வருடங்கள் கழிந்தும், பல நாடுகள் நிர்ணயிக்கப்பட்ட இலக்கை அடைய முடியாது இருந்தன. பல்வேறு நாடுகளின் பிரதிநிதகள் செனகலில் உள்ள டாக்கர் என்ற இடத்தில் மறுபடியும் கூடிக் கலந்து பேசி, 2015ம் ஆண்டிற்குள் அனைவருக்கும் கல்வி என்ற இலக்கை எட்டுவதற்கு நடவடிக்கைகைகள் எடுப்பதற்கு தங்கள் உறுதிப்பாட்டை மீண்டும் உறுதி செய்தனர். குழந்தைகள், இளைஞர்கள் மற்றும் பெரியவர்கள் ஆகியோரது கல்வித் தேவைகளை 2015ற்குள் பூர்த்தி செய்ய, கல்வி சம்பந்தமான 6 இலக்குகளை, இவர்கள் கண்டறிந்துள்ளன்ா.
இவை அனைத்திற்கும் முன்னணித் தொடர்பு இயக்கமான யுனெஸ்கோ, சர்வதேச அளவிலான முயற்சிகளை ஒன்று திரட்டி, அனைத்தையும் இணைத்து அனைவருக்கும் கல்வி என்ற பணியிணை ஒருங்கிணைக்கிறது. அரசாங்கங்கள், வளர்ச்சிப்பணிக்கான நிறுவனங்கள், அரசு சாரா இயக்கங்கள், அமைப்புகள் மற்றும் ஊடகங்கள் ஆகியோர், மேலே குறிப்பிட்ட குறிக்கோளை எட்டுவதற்காகப் பணிபுரிந்து வரும் அமைப்புகளில் சிலவாகும்.
அனைவருக்கும் கல்வி சம்பந்தமான குறிக்கோள்களை எட்டும் முயற்சிகள் உலகளாவிய வகையில் நடத்து வரும் எட்டு மில்லினியம் வளர்ச்சி இலக்குகளை அடைவதற்கும் பெருமளவில் உதவி புரிவதாய் அமையும். அதிலும் குறிப்பாக மில்லினியம் வளர்ச்சி இலக்குகளின் இரண்டாவது இலக்காண உலக அளவிலான ஆரம்பக்கல்வி மற்றும் 3வது இலக்கான கல்வி கற்பதில் பாலின சமத்துவம் ஆகியன 2005க்குள் எட்டப்பட உதவும்.
கிராம மக்களிடையே, கல்வியின் முக்கியத்துவத்தைப் பற்றி அறியச் செய்யும் வகையில் பிரச்சாரம் செய்வது, முக்கியத் தேவையாக உள்ளது. கீழ்க் காணும் விஷயங்கள், மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்பு காண உதவும்.
1. பெண் குழந்தைகளுக்கும் கல்வி அளிப்பது
2. குழந்தை தொழிலாளர்களுக்குக் கல்வி மற்றும் இணைப்புக் கல்வித் திட்டங்கள் செயல்பாடு
3. எஸ்.சி., எஸ்.டி., பி.ஸி மற்றும் சிறுபான்மையினருக்குக் கல்வியறிவு அளிப்பது
4. தனித்திறன் படைத்த, உடல் ரீதியாக சவாலைச் சந்திக்கும் குழந்தைகள், சிறப்புக் குழந்தைகள் ஆகியோர்களுக்குக் கல்வியறிவு அளிப்பது
5. பெண்களுக்கு கல்வி அளிப்பது

No comments:

Post a Comment